சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

மூன்றாம் ஆயிரம்   நம்மாழ்வார்  
திருவிருத்தம்  

Songs from 2478.0 to 2577.0   ( ஆழ்வார்திருநகரி )
Pages:    Previous   1  2  3    4  5  6  Next
கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்றுகொலோ?



[2517.0]
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே



[2518.0]
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம் பிரான தடங் கண்களே



[2519.0]
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?



[2520.0]
Back to Top
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையையே



[2521.0]
பெருங் கேழலார் தம் பெருங் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல்
வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே



[2522.0]
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப்பொன்பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட போய்
திட நெஞ்சம் ஆய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே



[2523.0]
திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம் கொல் என் மெல்லியற்கே?



[2524.0]
மெல்லியல் ஆக்கைக் கிருமிக் குருவில் மிளிர்தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு பண்டுபண்டே



[2525.0]
Back to Top
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இப் பாய் இருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே



[2526.0]
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே



[2527.0]
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையா
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே



[2528.0]
அழைக்கும் கருங் கடல் வெண் திரைக் கைக்கொண்டு போய் அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற மண் மாதர் விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே



[2529.0]
வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம்
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வத் தண் அம் துழாய்த்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ்
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே



[2530.0]
Back to Top
வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
மாசு இல் மலர் அடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே



[2531.0]
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே?



[2532.0]
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே



[2533.0]
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே



[2534.0]
கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறு அலர் தாமரைக் கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே?



[2535.0]
Back to Top
அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண்ணம் துழாய்க்கு
உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே



[2536.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song